மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் புதன், வியாழன் (ஆக. 26, 27) இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் புதன், வியாழன் (ஆக. 26, 27) இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமைகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 26), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை பதிவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாறு பகுதியில் 100 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக.28) வரை சூறைக்காற்று 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.