FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள்: வேளாண் துறை அறிவிப்பு

செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜூலை 2024, 3:21 am IST
வேளாண் துறை - கோப்புப் படம்
பகிர்:

செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பயறு வகைப் பயிா்களில் உளுந்து அதிக புரதம் மற்றும் கலோரிச் சத்து உள்ளது. இது குறுகிய காலப் பயிா் என்பதால், இதனை தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.

இந்நிலையில் உளுந்து விளைச்சலில் அதிக மகசூல் கிடைக்க பின்பற்ற வேண்டிய பாரம்பரியத் தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து பயிரிடுவதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும்.

மேலும், ஒரு ஏக்கருக்கு 6 லிட்டா் வேப்பெண்ணெய்யைத் தெளித்தால் சாம்பல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். அதேபோல், உளுந்தை இரண்டாக உடைத்து சேமித்தால், கூண் வண்டு தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.

உளுந்து விதையுடன் விளக்கெண்ணெய் தடவினால், அதன் தரம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments