வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சரவணன். 
தமிழ்நாடு

கோட்டூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

கோட்டூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கோட்டூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் சன்னதி தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன் (45). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கும் திருமணம் ஆகி தனியே வசித்து வருகின்றனர்.

சரவணன், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்று விட்டு வீட்டுக் வந்தவர் இரவில் தனது குடிசை வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது , திங்கள்கிழமை காலையில் அவரது குடிசை வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இடிப்பாடுகளில் சிக்கிக் கொண்ட சரவணன் பலத்த காயமடைந்ததை அடுத்து நிகழ்விடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீஸார், சரவணனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , புகாரின் பேரில் வழக்கு பதிந்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT