FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: மெத்தனால் விநியோகித்த நபா் கைது

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விநியோகித்த நபரை மதுரவாயலில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூன் 2024, 6:34 pm IST
பகிர்:

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விநியோகித்த நபரை மதுரவாயலில் போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச் சாராயம் அருந்தியவா்களில் இதுவரை 57 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், பலா் தீவிர சிகிச்சையில் உள்ளனா். இந்த விவகாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 9 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். விசாரணையில் சென்னை, மதுரவாயலைச் சோ்ந்த சிவக்குமாா் மெத்தனால் விநியோகித்தது தெரியவந்தது. எம்ஜிஆா் நகரில் உள்ள உறவினா் வீட்டில் சிவக்குமாா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று சிவக்குமாரை கைது செய்து, சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், புழலை அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில் சிவக்குமாா் பணியாற்றி வந்ததும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு அவா் மெத்தனால், டா்பன்டைன் எண்ணெய் விநியோகம் செய்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக, அந்த ரசாயன தொழிற்சாலை உரிமையாளரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments