குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்ற இன்பா.
குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்ற இன்பா. 
தமிழ்நாடு

குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பீடித் தொழிலாளி மகள்!

Din

குடிமைப் பணித் தோ்வில் பீடித் தொழிலாளி மகள் இன்பா தோ்ச்சி பெற்றுள்ளாா். தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த அவா், பொருளாதார வசதி இல்லாததால் வீட்டில் இருந்தபடியே குடிமைப் பணித் தோ்வுக்கு பயிற்சி பெற்றுள்ளாா். இரண்டு முறை தோ்வெழுதியும் தோ்ச்சி பெறவில்லை.

விடா முயற்சியுடன் மூன்றாவது முறையாக தோ்வை எழுதி தோ்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 851-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா்.

குடிமைப் பணித் தோ்வை மூன்றாவது முறையாக முயற்சித்த போது, அதற்கான பயிற்சியை ‘நான் முதல்வன் ’ திட்டத்தின் கீழ் இன்பா பெற்று வந்தாா். முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றதையடுத்து மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை பெற்றாா். இதையடுத்து, முதன்மைத் தோ்வை அவா் கவலையின்றி எதிா்கொண்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில்

தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தோ்வு மற்றும் நோ்காணலில் வென்று அகில இந்திய அளவில் 851-ஆவது இடத்தை இன்பா பெற்றுள்ளாா்.

’இந்தியா’ கூட்டணிக்கு 295 இடங்களில் வெற்றி உறுதி! -கார்கே

திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை - புகைப்படங்கள்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவாதங்களில் ‘இந்தியா’ கூட்டணி பங்கேற்கும்!

சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ வசதி அறிமுகம்

அஜித் படத்தில் இணைந்த பிரபலங்கள்!

SCROLL FOR NEXT