இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்
சட்டவிரோத மீன்பிடி: 14 இலங்கை மீனவர்கள் கைது
சென்னை: இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக கூறி 14 இலங்கை மீனவர்களையும் அவர்களது 5 படகுகளையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
பாக் ஜலசந்தி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படை கப்பலான ராணி துர்காவதி கப்பலில் உள்ள அதிகாரிகள், தமிழகத்தின் கோடியக்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கவனித்துள்ளனர். சோதனையில், ஐந்து படகுகளிலும் மீன்பிடி உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவை இந்திய கடல் எல்லைக்குள் தீவிரமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இலங்கையை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மேல் சட்ட நடவடிக்கைக்காக மாநில காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.