இரவில் கடற்கரை, பூங்காக்களில் அனுமதி கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களில் அனுமதி கோரி வழக்கு.
இரவு நேரங்களில் கடற்கரை மற்றும் பூங்காக்களில் அனுமதிக்கக் கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரை மற்றும் பூங்காக்களில் இரவில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மக்களுக்கு அனுமதியில்லை. தடையை மீறி கடற்கரை செல்பவர்களை ரோந்து காவல்துறையினர் வெளியேற்றுவது வழக்கம்.
இந்த நிலையில், கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு வரும் மக்களை வெளியேற்ற கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.