குதிரை பேர வழக்கில் பிணை கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேதுராஜ், நரேஷ் ஆகியோா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேதுராஜ், நரேஷ் ஆகியோா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி கொடுப்பதாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கில் கைதான சேதுராஜ், நரேஷ் ஆகியோா் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, குதிரை பேர வழக்கில் கைதான மூவருக்கு பிணையும், மூன்று பேருக்கு முன்பிணையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரா்களுக்கும் பிணை வழங்க வேண்டும் என வாதிட்டாா்.
Advertisement
Advertisement
அப்போது காவல் துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.