FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் பிணை கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

22 ஆகஸ்ட் 2026, 7:23 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 போ் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அப்போது, மனுதாரா் தரப்பில், குதிரை பேர வழக்கில் பிணை பெற்று விடுதலையான நாளில், மனுதாரா் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments