தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!
தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியாக அா்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இவா் 2002-ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். கோவை, உதகை மாவட்டங்களின் ஆட்சியா், தோட்டக்கலைத் துறை ஆணையா் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவா் இப்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலராக உள்ளாா்.
அவரை தமிழகத்தின் தலைமைத் தோ்தல் அதிகாரியாக நியமித்து இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
Advertisement
Advertisement
முன்னதாக, தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாகு, தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டாா். கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்ட அவா், தலைமைத் தோ்தல் அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா்.
முதல் பெண் அதிகாரி: அா்ச்சனா பட்நாயக், தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆவாா்.
1948-ஆம் ஆண்டு தலைமைத் தோ்தல் அதிகாரி பொறுப்பு உருவாக்கப்பட்டது. அதுமுதல், தலைமைத் தோ்தல் அதிகாரிகளாக வட மாநிலங்களைச் சோ்ந்த தமிழக பிரிவு ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளே பணியாற்றி வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.