முகப்பு
தமிழ்நாடு

10, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 22 நவம்பர் 2024, 10:02 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதியும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது.

தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அரையாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்களுக்கு பின் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரையாண்டுத் தேர்வு அட்டவணையும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments