முகப்பு
தமிழ்நாடு

கனமழை: வேளச்சேரிக்கு படகுகள் அனுப்பிவைப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை வேளச்சேரிக்கு படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Updated On : 14 அக்டோபர் 2024, 5:26 pm IST
வேளச்சேரிக்கு கொண்டுவரப்பட்ட படகுகள்
பகிர்:

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை வேளச்சேரிக்கு படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வேளச்சேரி கைவேலி மேம்பாலம், புதிய மேம்பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

வேளச்சேரி பாலத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு காவல் துறை தரப்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பலர் அபராதத்தை பொருட்படுத்தாமல் கார்களை எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கார்களின் விலையை, சேத மதிப்பீட்டை ஒப்பிடும்போது, அபராதத் தொகையை கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் பலர் கார்களை மேம்பாலத்தின் மீதே நிறுத்திவைத்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக். 15) மிக கனமழையும், நாளை மறுநாள் (அக். 16) அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் மண்டலவாரியாக மழை பாதிப்புகள் குறித்து கண்டறிய ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. மேலும், அரக்கோணத்திலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டவாரியாக வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

அந்தவகையில் சென்னையில் அதிகம் வெள்ள பாதிப்புக்குள்ளாகும், வேளச்சேரிக்கு படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை வெள்ளத்தின்போது வேளச்சேரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும்.

இதனால் அங்கு மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | அதிகனமழை எச்சரிக்கையால் அச்சம் வேண்டாம்: பாலச்சந்திரன் சொல்லும் ஆறுதல்!

வேளச்சேரி பாலத்தில் கார்கள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மக்கள் பலர், தங்கள் கார்களை வேளச்சேரி பாலத்தின்மீது இருபுறங்களிலும் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். வெள்ளத்தில் கார்கள் அடித்துச்செல்லப்படாமல் இருக்கவும் பாதுகாப்பிற்காகவும் கார்களை பாலத்தின் நிறுத்திவைத்துள்ளனர்.

வேளச்சேரி கைவேலி மேம்பாலம், புதிய மேம்பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

வேளச்சேரி பாலத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு காவல் துறை தரப்பில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் பலர் அபராதத்தை பொருட்படுத்தாமல் கார்களை எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments