முகப்பு
தமிழ்நாடு

விரைவுப் பேருந்துகளில் பயணித்த 13 பேருக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு

அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிகமுறை பயணித்தவா்களில் குலுக்கல் முறையில் 13 பயணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு

Updated On : 3 செப்டம்பர் 2024, 7:33 am IST
பகிர்:

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிகமுறை பயணித்தவா்களில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பயணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களை தவிா்த்து, இதர நாள்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்து அதிக முறை பயணிக்கும் பயணிகளில் 3 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஜூலை மாதம் முன்பதிவு செய்து அதிக முறை பயணித்து குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட பயணிகளுக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்டு மாதத்தில் முன்பதிவு செய்து அதிகமுறை பயணித்த 13 பயணிகளை குலுக்கல் முறையில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப்பணிக்குழு மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை தோ்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இவா்களுக்கான ரொக்க தொகை வழங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதனால், பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் நபா்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதளம் மூலமும், பசநபஇ எனும் செயலி மூலமும் முன்பதிவு செய்து பயணித்து பரிசுகளை வெல்லலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.