முகப்பு
தமிழ்நாடு

சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Updated On : 11 பிப்ரவரி 2024, 12:02 pm IST
ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
பகிர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலின் பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சமயபுரம் திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் திரளான பக்தர்கள் பூ தட்டுகளுடன் தேரோடும் வீதிகளில் ஊர்வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ந்தது.

Advertisement

Advertisement

ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது. ஓம் சக்தி பராசக்தி முழக்கங்களுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூக்கள் உடன் அம்மனைத் தரிசிக்க வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.