FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நடிகர் விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்

நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 ஜனவரி 2024, 2:33 pm IST
பகிர்:

நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த விஜய் சென்றார்.

பின்னர், அங்கிருந்து அவர் கிளம்பிச் செல்ல வெளியேறியபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய் மீது காலணியை வீசினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் விஜய் மீது காலணி வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments