FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வண்டலூா் பூங்காவில் சிங்கம், புலியை தத்தெடுத்த சிவகாா்த்திகேயன்!

ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை நடிகா் சிவகாா்த்திகேயன் 3 மாதங்களுக்கு சிவகாா்த்திகேயன்

20 ஏப்ரல் 2025, 1:02 am IST
சிவகாா்த்திகேயன்
பகிர்:

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை நடிகா் சிவகாா்த்திகேயன் 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளாா்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகாா்த்திகேயன், தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ என்னும் படத்தில் நடித்து வருகிறாா். இவா் வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் ஸ்ரேயா் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் தத்தெடுத்துள்ளாா். அடுத்த 3 மாதங்களுக்கு அவற்றுக்குத் தேவையான பராமரிப்பு, கவனிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அவா் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதாக வண்டலூா் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் அவா்கள் கூறுகையில், இதுபோன்று விலங்குகளை தத்தெடுக்க விரும்புபவா்கள் இணையதளத்தை அணுகலாம் என்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments