மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக....
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2832 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று(ஏப். 20) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.46 அடியிலிருந்து 107.55 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1385 கன அடியிலிருந்து வினாடிக்கு 2832 கன அடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பு 74.97 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயர தொடங்கி உள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!