FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன்! - முதல்வர் புகழாரம்

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம்.

29 ஏப்ரல் 2025, 2:53 pm IST
சென்னையில் மெரீனா கடற்கரையில் உள்ள பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு கீழ் உள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.
பகிர்:

புகழ்பெற்ற கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"வேழத்தின் வலிமையோடு - திகட்டாத தீந்தமிழின் சுவையில், மடமைகளைச் சுட்டெரித்து, இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக!

Advertisement

Advertisement

இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இணையரை வாழ்த்தும் போதெல்லாம், பாவேந்தர் எடுத்துச் சொல்லியபடி, வீட்டுக்கு விளக்காக - நாட்டுக்குத் தொண்டர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதையே அறிவுரையாக வழங்குகிறேன்.

குன்றிலிட்ட விளக்காகத் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் யாத்த வரிகளைத் தமிழர் நெஞ்சங்களில் ஏந்திப் பயணித்திடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் 'தமிழ் வார விழா' இன்று முதல் மே 5 வரை கொண்டாடப்படுகிறது.

பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி சென்னையில் மெரீனா கடற்கரையில் உள்ள பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு கீழ் உள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள், சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments