நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள்... தவெக ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் எஸ்.பி.!
தவெக ஆனந்தை பெண் எஸ்.பி. எச்சரித்தது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை புதுவை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கடுமையாக எச்சரிக்கை விடுத்த காணொலி வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளார்.
தவெகவின் கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், காவல்துறையினர் நிபந்தனைகள் விதித்து, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது, 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
க்யூஆர் கோட் உள்ள அனுமதிச் சீட்டு உள்ளவர்களை மட்டுமே காவல்துறையினர் திடலுக்குள் அனுமதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், க்யூஆர் கோட் அனுமதிச் சீட்டு இல்லாத தொண்டர்கள் சிலரை அனுமதிக்கக் கோரி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ஈஷா சிங்கிடம் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த எஸ்பி ஈஷா சிங், “நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நீங்கள் சொல்லித் தராதீர்கள். உங்களால் பலர் இறந்துள்ளார்கள்.” என ஆக்ரோஷமாக பேசும் விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.
Don't tell me what to do... The woman SP warned Tvk Anand
இதையும் படிக்க : புதுவையில் தவெக தலைவர் விஜய்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.