எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு X
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(டிச. 11) சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற டிச. 14 ஆம் தேதி தில்லி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுகவில் கூட்டணி சேர்ப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் இபிஎஸ்ஸுக்குதான் அதிகாரம் என்று சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, அதிமுக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட வருகிற டிச. 15 முதல் விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BJP Leader Nainar Nagendran meets ADMK General Secretary Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை அருகே குட்டையில் உற்சாகக் குளியல் போட்ட யானைகள்!

நொய்டாவில் ஆப்பிள் விற்பனையகம் திறப்பு!

ரசிகர்களுடன் அஞ்சான் திரைப்படத்தைப் பார்த்த சூர்யா!

வா வாத்தியார் வெளியீடு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணி வாகனம் மீது மோதிய கார்! பணியாளர்கள் காயம்! | Chennai

SCROLL FOR NEXT