FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

திராவிட இயக்கம் இந்த மண்ணில் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

20 டிசம்பர் 2025, 5:36 pm IST
நிகழ்ச்சியில் பேசும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

திராவிட இயக்கம் இந்த மண்ணில் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகூர் சில்லடி கடற்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலதன மானிய நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிவற்றின் மூலம் 1.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு பூங்காவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு நினைவு மலரினை” வெளியிட்டு, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிஃபாவின் குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவுக்கே முன்மாதிரியான மாவட்டமாக, ஒரு வழிகாட்டக் கூடிய மாவட்டமாக இந்த நாகை மாவட்டம் விளங்கிக்கொண்டிருக்கிறது. ஏன் என்றால், இங்குதான் சிக்கல் சிங்காரவேலர் கோயிலும் இருக்கிறது, வேளாங்கண்ணி சர்ச்சும் இருக்கிறது, நாகூர் தர்காவும் இருக்கிறது. சாதி, மதம் பார்க்காமல், எல்லாரும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய மண், இந்த நாகை மண்.

குடியரசு மூலமாக, சுயமரியாதை கருத்துகளை எல்லாம் உள்வாங்கி ஒரு பக்கம், கலைஞரின் பேச்சுக் குரலும், இன்னொரு பக்கம், ஹனிபாவின் பாட்டுக் குரலும் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த சமயத்தில்தான், இந்தி திணிப்பை எதிர்த்து பெரியார் முதல் மொழிப் போரை அறிவித்தார். அந்தப் போராட்டம் தான், இசை முரசு ஹனிபாவையும், கலைஞரையும், அன்றைக்கு போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது.

இந்தி திணிப்பை எதிர்த்து தன்னுடைய 14 வயதில் திருவாரூர் வீதியில் போராட்டத்தில் இறங்கினார் கலைஞர். கலைஞரைவிட 2 வயது இளையவரான இசை முரசு ஹனிபா நாகூர் வீதியில்,

இந்தியை எதிர்த்து ஊர்வலம் போனார். இந்த வரலாற்றை இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றைக்கு பெரியார் தலைமையிலும், பின்னர் அண்ணா

தலைமையிலும் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போரில் அன்றைக்கு தமிழ்நாடு வென்று காட்டியது. இன்றைக்கு அதே இந்தி திணிப்பு வேறு ஒரு ரூபத்தில் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் நுழையப்பார்க்கிறது.

மத்திய அரசு இன்றைக்கு மும்மொழிக் கொள்கை என்று சொல்லி, மீண்டும் இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது. இந்தியை ஏற்றுக் கொண்டால், மும்மொழிக் கொள்கைளை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய மக்களுடைய வரிப்பணம் 2,000 கோடி ரூபாயை தருவோம் என்று மத்திய அமைச்சர் சொல்கிறார்.

ஆனால், நம்முடைய முதல்வர் நீங்கள் 2,000 கோடி இல்லை, 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் எந்த காலத்திலும் தமிழ்நாட்டிற்குள் இந்தி திணிப்பை நான் நுழையவிட மாட்டேன் என்று நம்முடைய முதல்வர் இன்றைக்கு தைரியமாக சொல்கிறார்.

எதற்காக நம்முடைய முதல்வர் அதை எதிர்க்கிறார். ஏன் என்றால், நம்முடைய முதல்வருக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியும், தமிழ் மொழிக்காக நடந்த போராட்டங்கள் தெரியும்.

அதனால்தான் தமிழ்நாட்டில் எப்போதுமே இருமொழி கொள்கைதான் இருக்கும் என்று நம்முடைய முதல்வர் தைரியமாக துணிச்சலாக சொல்கிறார்.

நான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மீண்டும் சொல்கின்றேன். நாகூர் ஹனிபாவின் காலடிச்சுவடுகள் இந்த மண்ணில் இருக்கின்ற வரைக்கும், அவருடைய குரல் இந்த காற்றில் கலந்திருக்கின்ற வரைக்கும் தமிழ்நாடு ஒரு போதும் இந்தி திணிப்பை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காது என்பதை உறுதியோடு உங்கள் முன்பு சொல்கின்றேன்.

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

ஹனிபா பாடிய திராவிட இயக்கப் பாடல்களும், இஸ்லாமியப் பாடல்களும் என்றைக்குமே நம்முடைய காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்னும் சொல்லவேண்டும் என்றால், அவர் பாடிய பிறகுதான் திராவிட இயக்கத்தினுடைய மாநாடுகள் தொடங்கும்.

எனவே, இந்த மண்ணில் திராவிட இயக்கம் உள்ள வரைக்கும், இஸ்லாமிய நெறி உள்ள வரைக்கும், இசை முரசு நாகூர் ஹனிபாவின் குரல் எப்போதும் நிச்சயம் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். நாகூர் ஹனிபா எப்படி மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்கிறாரோ, அதே போல, தமிழ்நாட்டையும் நாம் என்றைக்கும் மதநல்லிணக்க மாநிலமாக நாம் வைத்திருக்க வேண்டும். மதநல்லிணக்கத்தைக் காக்கின்ற அரணாக நம்முடைய முதல்வர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin has said that as long as the Dravidian movement exists on this earth, Hanifa's voice will continue to resonate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments