தமிழக முதல்வர் Center-Center-Chennai
தமிழ்நாடு

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: தமிழக அரசு

குடியரசு நாளை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு

DIN

சென்னை: குடியரசு நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழிக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதைக் கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிக்கப்படுவதாகவும் குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு மற்றும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது ஆளுநர் மாளிகையில், அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுங்கட்சி உள்பட அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கவிருக்கிறார். அதற்கான அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துவிட்டன. தற்போது, ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்தது - சுமார் 50% வாக்குகள் பதிவு!

பொங்கல் விடுமுறையில் மெரீனாவில் அலைமோதிய கூட்டம் - போக்குவரத்து நெரிசல்!

ஆளுங்கட்சியின் ஆயுதமாக தணிக்கை வாரியம்: கனிமொழி எம்.பி.

யு-19 உலகக் கோப்பை - இந்தியா அபார வெற்றி!

இந்திய கடல் எல்லையில் பாக். மீனவர்கள் 9 பேர் கைது

SCROLL FOR NEXT