FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

'காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!

சென்னை காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கவில்லை என ஆளுநர் ரவி குற்றச்சாட்டு.

Updated On : 30 ஜனவரி 2025, 1:57 pm IST
ஆளுநர் ஆர்.என். ரவி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்றும் அவர் கேலி செய்யப்பட வேண்டுமா என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்தியின் நிகழ்வுகளை சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் நடத்த வேண்டும், அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று காந்தி மண்டபத்தில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்க மறுக்கிறார் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில்,

'காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும்.

காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?

தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பைச் சந்தித்தன.

காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments