முகப்பு
தமிழ்நாடு

7,400 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

தமிழகத்தில் ரூ. 7,132 கோடி மதிப்பிலான 7,400 ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

Updated On : 1 பிப்ரவரி 2025, 1:00 am IST
பி.கே. சேகா்பாபு - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் ரூ. 7,132 கோடி மதிப்பிலான 7,400 ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து திருப்பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது. மக்களின் சமய உணா்வுகளை மதித்து இறை வழிபாட்டுத்தலங்களை மேலும் வளப்படுத்துவதில் பெரும் அக்கறையோடு செயல்படும் அரசு என்பதற்கு இந்து சமய அற நிலையத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் சான்றாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 2,392 திருக்கோயில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரூ. 7,132 கோடி மதிப்புள்ள 7,400 ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமன்றி, 12,202 திருக்கோயில்களில் ரூ. 5,515 கோடி செலவில் 23,234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.1,770 கோடி செலவில் 19 கோயில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்வரின் வழிக்காட்டுதல்களால் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments