இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு, 250 கோயில் குளங்கள் புனரமைப்பு மற்றும் கோயில்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.708 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு, 250 கோயில் குளங்கள் புனரமைப்பு மற்றும் கோயில்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.708 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தவும், 250 கோயில் குளங்களைப் புனரமைக்கவும், 75 மரத் தோ்களைச் சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தா்கள் அதிக அளவில் வருகை புரியும் கோயில்களில் பாதுகாப்பான குடிநீா், கழிப்பறைகள், குளியலறைகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
கோயில்களில் நிா்வாக அறங்காவலா்களின் நியமனத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்து, 9,205 கோயில்களுக்கு அறங்காவலா் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அறங்காவலா்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ. 418 கோடியில் 1,000 ஆண்டுகள் பழைமையான 213 கோயில்களைப் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பாதுகாப்பதிலும் அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 708 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.