கடலூர் ரயில் விபத்து: பலி 3-ஆக உயர்வு! ஒரே குடும்பத்தில் இருவர் உயிரிழந்த சோகம்!
கடலூர் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு..
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது.
இந்த விபத்தில், திராவிட மணி மகள் சாருமதி (16), விஜயசந்திரகுமார் மகன் விமலேஷ்(10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
Advertisement
Advertisement
மேலும், ஓட்டுநர் சங்கர் (47), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), நிவாஸ் (13), சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த செழியன் (15) ஆகியோர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது சிகிச்சைப் பலனின்றி செழியன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே பலியான சாருமதியும் செழியனும் சகோதர சகோதரி ஆவர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, விபத்தை பார்க்கவந்த அண்ணாதுரை (55) என்பவர் மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரணமாக தலா ரூ. 5 லட்சம் அறிவித்துள்ளார். அதேபோல், ரயில்வே தரப்பிலும் ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
The death toll in the train accident that occurred in Chemmanguppam, Cuddalore district, has risen to 3.
இதையும் படிக்க : கடலூர் கோர விபத்துக்கான காரணம் என்ன? - ரயில்வே விளக்கம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.