கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன்!
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
கடலூர் ரயில் விபத்து தொடர்பாக செம்மங்குப்பம் கேட் கீப்பர், ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டு, ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், நேற்று(ஜூலை 8) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர்.
இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்ளிட்ட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இவர்கள் அனைவரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக புதிய கேட் கீப்பராக தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Cuddalore train accident: 13 people, including the gatekeeper and driver, summoned!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.