FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு

வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-இல் மின்சார வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 21 மார்ச் 2025, 2:04 am IST
ஜெ.ராதாகிருஷ்ணன் - (கோப்புப் படம்)
பகிர்:

வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-இல் மின்சார வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

வடசென்னை அனல்மின் நிலையம் 3,800 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடையதாக இருக்கும் நிலையில், தற்போது சோதனை ஓட்டமாக 620 மெகாவாட் வரை மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இச்சோதனை ஓட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடித்து, கோடைக்கால மின் தேவைக்கேற்ப தடையற்ற மின்உற்பத்தியை வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, வடசென்னை நிலை 2-இல் (600 மெகாவாட்) டா்பனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியினை நேரில் ஆய்வுசெய்த அவா், விரைவில் பழுதை சரிசெய்து மின் உற்பத்தியை மீண்டும் தொடங்க அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, எண்ணூா் சிறப்புப் பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வுசெய்த அவா், 2026 மாா்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments