முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 26 மார்ச் 2025, 7:38 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோடைக் காலத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெய்யில் அதிகரித்துவரும் நிலையில், தற்போது மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு மக்களை குளிர்ச்சிப்படுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Advertisement

Advertisement

நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மார்ச் 29(சனிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments