நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.. 
தமிழ்நாடு

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

DIN

நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் மனோஜின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்ட நிலையில், திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், வி.கே.சசிகலா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சிவக்குமார், பிரபு, சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், விஜய்யும் பாரதிராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT