ஒரே நாளில் ரூ.1,600 விலை உயர்ந்த தங்கம்!
தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்துள்ளது தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 1,600 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று காலை ரூ.800 உயர்ந்த நிலையில், மாலை ரூ.800 உயர்ந்துள்ளது.
இதனிடையே, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கும், சவரனுக்கு கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,600-க்கும், சவரனுக்கு கு ரூ.800 உயர்ந்து ரூ.90,800-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.176-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயர்ந்து ரூ.1.76 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of gold jewellery in Chennai has increased by Rs. 1,600 in a single day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.