கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கிவைத்தார் மோடி!
இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கிவைத்தது பற்றி...
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
ஆந்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் வருகைதந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக கொடிசியா வளாகத்துக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறங்களிலும் திரண்டு பாஜகவினரும், மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (நவ.19) முதல் 3 நாள்கள் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
இந்த மாநாட்டைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி, இயற்கை வேளாண் கண்காட்சியைப் பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த மாநாட்டில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருள்களை விநியோகிப்போர், விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளனா்.
Modi inaugurates organic farming conference in Coimbatore
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.