தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

தங்கம் விலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் தங்கம் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் கடந்த அக். 7 ஆம் தேதி ரூ. 90,000-யைக் கடந்தது. அடுத்த 3 நாள்களிலேயே (அக்.11) ரூ. 92,000 -யை எட்டியது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ.92,640- க்கு விற்பனையான நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்து ரூ. 94,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 245 உயர்ந்து ரூ.11,825-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று காலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து தற்போது ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதனால் மக்கள் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறங்கடிக்கும் ரஷ்மிகா, மலைக்காவின் பாய்சன் பேபி!

ரோஹித் சர்மா, விராட் கோலியிடமிருந்து இந்திய அணி எதிர்பார்ப்பதென்ன?

பிக் பாஸ்: திவாகர் கேட்டவுடன் முத்தம் கொடுத்த அரோரா! புலம்பும் ரசிகர்கள்...

மலையாளத்தில் முதல்முறை... ரூ.300 கோடியைத் தாண்டிய லோகா!

மதராஸி ப்ளாக்பஸ்டரா? ஏ. ஆர். முருகதாஸை சீண்டிய சல்மான் கான்!

SCROLL FOR NEXT