முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 119 அடியிலிருந்து 119.69 அடியாக உயர்வு.

Updated On : 20 அக்டோபர் 2025, 8:56 am IST
கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119 அடியிலிருந்து 119.69 அடியாக உயர்ந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,374 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,420 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 92.97டிஎம்சியாக உள்ளது.

Advertisement

Advertisement

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணை நடப்பு ஆண்டில்மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 7.94 லட்சம் பேர் பயணம்!

summary

Mettur Dam water level rises

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.