முகப்பு
தமிழ்நாடு

திருமண நிதியுதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு

5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர்...

Updated On : 11 செப்டம்பர் 2025, 1:20 am IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்க 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

சமூக நலத் துறையின் கீழ் டாக்டா் தா்மாம்பாள் அம்மையாா் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், ஈவெரா மணியம்மையாா் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, பயனாளிகளுக்கு வழங்க 22 காரட் கிராம் தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன. ரூ.45 கோடிக்கு தங்க நாணயங்கள் பெறப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் அறிவிப்பு
summary

Marriage Assistance Schemes: Tender for the purchase of 5,460 gold coins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.