சென்னை ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பற்றி...
சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அது புரளி என தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதன் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு இன்று(செப்.22) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் வானிலை ஆய்வு மையத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரிலும் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து இரு இடங்களிலும் ஊழியர்கள் வெளியற்றப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மிரட்டல் குறித்து காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Bomb threat to Chennai GST office, Meteorological Center
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.