கீழடி - நாக்பூர் இடையே நடக்கும் போர்; கீழடியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறேன்: கனிமொழி
கீழடியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குவதாக கனிமொழி எம்.பி. பதிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கீழடியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது
"பழந்தமிழ் நாகரிகத்தின் பெருமையைப் பறைசாற்றும் கீழடியிலிருந்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான எனது பரப்புரையைத் தொடங்குகிறேன்.
Advertisement
Advertisement
கீழடிக்கும் நாக்பூருக்கும் இடையிலான போராக நடைபெறும் இந்தத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும்; தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து காக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆகியோருடன் உள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
MP Kanimozh is commencing her campaign from Keeladi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.