வாக்களிக்க யாரும் வரவில்லை! நான்குனேரி அருகே வெறிச்சோடிய வாக்குச்சாவடி!
நான்குனேரி அருகிலுள்ள பெரும்பாத்து கிராமத்தில் வசித்துவரும் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே உள்ள வாக்குச்சாவடியில் யாரும் வாக்களிக்க வராததால், வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
நான்குனேரி அருகிலுள்ள பெரும்பாத்து கிராமத்தில் வசித்துவரும் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதால், வாக்குச்சாவடியில் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். வாக்களிக்க ஒருவர் கூட வரவில்லை.
மார்ச் 2-ஆம் தேதி சாதியப் பின்னணி கொண்ட குற்றவாளிகள் நடத்திய அரிவாள் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
Advertisement
Advertisement
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
இக்கிராமத்தில் மொத்தம் 974 வாக்காளர்கள் வசிக்கின்றனர். இதனிடையே தேர்தலையொட்டி கூட, தங்களைச் சந்தித்து எந்தவொரு உயர் அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாத்து வாக்குச்சாவடியில் ஒருவர் கூட வாக்களிக்க வராததால், வெறிச்சோடி காணப்படுகிறது.
TN Election 2026 No one turned up to vote polling station near Nanguneri Deserted
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.