FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோயில் திருவிழாக்களில் யானையை பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறை: அரசு பதிலளிக்க உத்தரவு

கோயில் திருவிழாக்களில் யானையை பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறை...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:30 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

கோயில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவது தொடா்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த சேவா அறக்கட்டளை சாா்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயில் திருவிழாக்கள், பிரம்மோற்சவம் உள்ளிட்ட விழாக்களின்போது யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிா்க்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து ஒப்புதல் வழங்கலாம். விழாக்களில் பயன்படுத்தப்படும் யானைகளின் தகுதி குறித்து அரசு கால்நடை மருத்துவரின் பெற வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் யானைகளுக்கு ஓய்வு அளிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்கலாம் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments