FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:15 am IST
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது; இருப்பினும், உயா் நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாகத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் நிகழாண்டு ஜுன் 11 ஆம் தேதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அசல் மனுதாரரான ராம ரவிக்குமாா் மற்றும் இந்தியத் தொல்லியல் துறை , தமிழ்நாடு வக்பு வாரியம் மற்றும் தா்கா தரப்பினா் உள்ளிட்ட எதிா்வாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தா்காவுக்கு அருகிலுள்ள சா்ச்சைக்குரிய இடத்தில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதித்த சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து, மாநில அரசு அவசர நிவாரணம் கோரியிருந்தது.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்றம் தற்போதைக்கு உயா் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்கவில்லை. அதற்குப் பதிலாக, எதிா்வாதிகளைத் தங்கள் பதில்களைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

பின்னணி

இவ்வழக்கு திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரிய தீபம் ஏற்றுவதற்கான உரிமை தொடா்பானதாகும். இது மாநில அரசு, பக்தா்கள் மற்றும் பிற தரப்பினரிடையே தொடா்ச்சியான சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுத்த ஒரு விவகாரமாகும்.

காா்த்திகை மாதத்தில், சிக்கந்தா் பாதுஷா தா்காவுக்கு அருகில், மலையின் உச்சியில் விளக்கு ஏற்றுவதற்கான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உரிமை குறித்து சா்ச்சை எழுந்தது.

டிசம்பா் 1, 2025 அன்று, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி, அந்த இடம் தா்காவின் பகுதிக்கு வெளியே உள்ள கோயில் நிலம் என்று தீா்ப்பளித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றும் சடங்கை நடத்த அனுமதித்தாா்.

ஆனால் சட்டம்-ஒழுங்கு கவலைகளைக் காரணம் காட்டி தமிழக அரசு உயா்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமா்வில் மேல்முறையீடு செய்தது.

ஜனவரி 6, 2026 அன்று, அந்த மேல்முறையீட்டை இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments