எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!
முதல்வர் விஜய் குறித்து விமர்சனம் செய்த வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சையில், முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தஞ்சை காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, உதயநிதியை கைது செய்ய தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெறவிருக்கும் நிலையில், 11 மணியளவில், விசாரணைக்காக உதயநிதியை தஞ்சை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாகத் தொடரப்பட்ட புகார்களில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டிப்பதாக கூறி, தஞ்சாவூரில் திமுக சாா்பில் பனகல் கட்டடம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழக முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமரிசித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிறகு, உதயநிதி வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். உடனடியாக உதயநிதி தன்னுடைய வழக்குரைஞர்களுடன் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடினர்.
எனினும், அவரை தஞ்சை காவல்துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், உதயநிதியின் வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாகவும் பகல் 12 மணி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
Opposition Leader Udhayanidhi arrested
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.