FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது வழக்குப் பதிவு. - படம்: தினமணி
பகிர்:

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் சிறுவனை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது, தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நொச்சிபாளையம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

அப்போது அவர் பேசுகையில், தாராபுரத்தில் மக்கள் எழுச்சியைப் பார்க்கும்போது திமுக வெற்றி உறுதி என்பது தெரிகிறது. ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால், 107 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் நம்முடைய கூட்டணியில் நம்முடைய வாக்குகளை வாங்கியவர்கள் மூலம் ஆட்சி அமைத்துள்ளார்கள். துரோகம் செய்த அவர்களை நாங்களும் மறக்க மாட்டோம். நீங்களும் மறக்கக் கூடாது.

முதல்வர் விஜய் தாராபுரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். கூட்டத்தில் அமைச்சர் சொன்னதும் வேட்பாளர் சத்தியபாமா அழ ஆரம்பித்து விட்டார். அவர் அழ வேண்டியதில்லை. நீங்கள்தான் அழவேண்டும். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் பாட்டுப் பாடி வருகின்றனர்.

கொலை, கொள்ளை, போதை பழக்கம், சட்டப் பேரவை உறுப்பினர் மீதே பாலியல் வழக்கு என 18 கேள்விகள் கேட்டேன். ஆனால் எதற்கும் முறையான பதில் சொல்லவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரிலேயே தினமும் மக்கள் போராடி வருகின்றனர். விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை கொடுப்பது இல்லை. சம்பளமும் கொடுப்பது இல்லை. திமுக ஆட்சியில் ரூ. 10 கோடியில் பி.ஏ.பி. கால்வாய் திட்டம் தூர் வாரப்பட்டது” என்றார்.

முன்னதாக, உதயநிதி பிரசாரத்தில் ஈடுபட்டபோது, சிறுவன் ஒருவரை வாகனத்தில் ஏற்றி பேச வைத்தார். அந்தச் சிறுவன் முதல்வர் விஜய்யை விமர்சித்துப் பேசினார்.

இந்த நிலையில், சிறுவனை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

summary

A case has been registered against Opposition Leader Udhayanidhi for canvassing votes using a young boy during the Dharapuram by-election campaign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments