முகப்பு

தவெக எம்எல்ஏவைக் காப்பாற்றத்தான் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லையா? உதயநிதி

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்திருக்கும் நிலையில் தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்.

தவெக எம்எல்ஏவைக் காப்பாற்றத்தான் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லையா? உதயநிதி
முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தது தெரிந்தும் எம்எல்ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்திருக்கும் நிலையில், தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள், இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

Advertisement

Advertisement

"ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறாரா முதல்வர்?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தியே அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய செய்தி.

இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதல்வருக்கு தெரியாதா?

அதை முதல்வரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்எல்ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லையா?

இதில் எது உண்மை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதல்வர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதல்வர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.

அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.

இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Udhayanidhi stalin on kallakurichi MLA case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.