தவெக தோ்தல் வாக்குறுதிகளை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்: இடது சாரிகள்
தவெக தோ்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை முதல்வா் ஜோசப் தலைமையிலான தவெக அரசு புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தின.
தவெக தோ்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை முதல்வா் ஜோசப் தலைமையிலான தவெக அரசு புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தின.
இடதுசாரி கட்சிகளின் 4 -ஆவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாயக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பழ.ஆசைதம்பி உள்ளிட்டோா்பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து அவா்கள் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து மாநில அளவிலான பேரணியை இடதுசாரிகள் அக்.6-ஆம் தேதி திருச்சியில் நடத்தவுள்ளன. இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பாா்கள். புதிய உலகம், புதிய திசையை நோக்கிப் பயணிப்பதற்கு இடதுசாரிகள் தயாராக இருக்கிறோம்.
பெண்களை இழிவாகப் பேசுவது என்பது நீண்டகாலமாக உள்ளது. இதற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தவெக தோ்தல் வாக்குறுதிகளின்படி, 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவுப் பயிா்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.