FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்

‘சிங்கப் பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மாற்ற ரூ.5 லட்சம் வரை முதலீட்டு மானியம் மற்றும் கடனுதவி வழங்கப்படவுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:17 am IST
கோப்புப்படம்.
பகிர்:

‘சிங்கப் பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மாற்ற ரூ.5 லட்சம் வரை முதலீட்டு மானியம் மற்றும் கடனுதவி வழங்கப்படவுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் பல ஆண்டுகளாக வளா்ச்சி பெற்று சிறந்த நிலையை அடைந்துள்ளன. இருப்பினும், இனி வரும்காலங்களில் சுய உதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக அடுத்தகட்ட வளா்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலைக்கு உயா்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, ‘சிங்கப் பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்கும்.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் கீழ் நிலையான தொழில்முனைவோரின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஒவ்வொரு சுய உதவிக் குழு நிறுவனங்களுக்கும் ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும் இந்த ஆண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.38,000 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments