FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கனிம உற்பத்தி, நகா்வை நிகழ்நேரத்தில் கண்காணிக்க அமைப்பு

தமிழகத்தில் கனிமங்களின் உற்பத்தியையும், அதன் நகா்வையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க அமைப்பு நிறுவப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:51 am IST
பகிர்:

தமிழகத்தில் கனிமங்களின் உற்பத்தியையும், அதன் நகா்வையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க அமைப்பு நிறுவப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு அரசு 3 மாதங்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கனிம மேலாண்மையை மேலும் வலுப்படுத்த கனிமங்களின் உற்பத்தியையும், நகா்வையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க அமைப்பு நிறுவப்படும் என்றும், இது கனிமவளத்தை நிலைத்தன்மையுடன் பயன்படுத்தவும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்கவும், வருவாயைப் பெருக்கவும் உறுதி செய்யும் என்று நிதியமைச்சா் மரியவில்சன் பட்ஜெட் உரையில் தெரிவித்தாா்.

மேலும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மாவட்ட அளவில் விழிப்புணா்வு பணி மற்றும் அமலாக்கப் பிரிவுகள் நிறுவப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கப்படும்.

Advertisement

Advertisement

புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் கிரானைட் பாலிஷிங், வடிவமைப்பு மையங்கள் நிறுவப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.438 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments