FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது பற்றி...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:55 pm IST
முதல்வர் விஜய் | திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி, ”மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க. செயல்படுத்தியதாகவே உள்ளது! என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Tamil Nadu Budget: Did 'change' mean merely a change of name? – Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments