இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்வி
தமிழ்நாட்டில் இனி இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் இனி இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணிகளை நிரந்தரமாக்குவோம் என மோசடியாகத் தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய தவெக அரசு, போராடும் ஒப்பந்த ஊழியர்களையும் ஒடுக்கி வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வழியாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தான் எனச் சொல்ல வருகிறதா தவெக அரசு?
இந்த அரசு ஏற்கனவே அரசுப் போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கிவரும் சூழலில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயற்சிப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவைச் சிதைக்கும் நடவடிக்கையாகும் எனப் பதிவிட்டுள்ளார்.
Are there no more permanent government jobs? - Kanimozhi asks
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.