FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இதுதான் ஊழலற்ற ஆட்சியா? ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மீது கனிமொழி எம்.பி. அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கனிமொழி எம்.பி. முன்வைத்தது குறித்து...

8 அக்டோபர் 2026, 9:22 pm IST
தவெக எம்எல்ஏ | கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

ஆதிதிராவிடர் நலவாரிய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் மீது திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி.யின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "திருவைகுண்டம் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், ஆதிதிராவிடர் நலவாரிய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி வைணவப் பெருமாள் என்பவரை ஏமாற்றி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களின் உண்மை முகம் இதுதான்.

ஆட்சிக்கு வந்த புதிதிலேயே, பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் இதே சட்டப்பேரவை உறுப்பினர் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டினார். அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு என்ற பெயரில் மருத்துவரை அவமானப்படுத்தியவரும் இதே நபர்தான்.

Advertisement

Advertisement

எனது தூத்துக்குடி தொகுதி மக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக இந்த நபர் இருக்கிறார் என்பது மேலும் கவலையளிக்கிறது.

மக்களின் பிரதிநிதியாக நீடிக்கத் தகுதியற்ற சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

summary

DMK MP Kanimozhi levels allegations against Srivaikuntam TVK MLA Saravanan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments