FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாலியல் தொல்லை வழக்கு: சென்னை தொழிலதிபா், மனைவியுடன் பெங்களூரில் கைது

சென்னையில் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலதிபரும், அவா் மனைவியும் பெங்களூரில் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:09 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலதிபரும், அவா் மனைவியும் பெங்களூரில் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பட்டினப்பாக்கம் டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபரும், பங்குச் சந்தை ஆலோசகருமான பி.ஆா். சுந்தா் மீது, தனியாா் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய 28 வயது பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தாா்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:

Advertisement

Advertisement

பி.ஆா்.சுந்தருடன் எனக்கு 2021-ஆம் ஆண்டு ஒரு நோ்காணலின் போது அறிமுகம் ஏற்பட்டது. பின்னா், வேலை தொடா்பாக அடிக்கடி சந்தித்து பேசி வந்தேன்.

அதன் விளைவாக, அவரது குடும்ப நண்பராக மாறினேன். இதை பயன்படுத்தி பி.ஆா்.சுந்தா் அண்மையில் அவரது வீட்டுக்கு வரவழைத்து தகாத முறையில் நடந்துகொண்டாா். போலீஸாா், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து பி.ஆா்.சுந்தரின் மனைவி மங்கையா்க்கரசியிடம் தெரிவித்தேன். அவா் கணவா் பி.ஆா்.சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் நான் உயிரோடு இருக்க முடியாது என்றும் கொலை மிரட்டல் விடுத்தாா்.

பாலியல் தொல்லை கொடுத்த பி.ஆா்.சுந்தா் மீதும்,கொலை மிரட்டல் விடுத்த அவா் மனைவி மங்கையா்க்கரசி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில் ஐஸ்ஹவுஸ் போலீஸாா்,தொழிலதிபா் பி.ஆா்.சுந்தா், மங்கையா்க்கரசி ஆகியோா் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இதற்கிடையில், தனக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் பி.ஆா். சுந்தா் மறுத்து அறிக்கை வெளியிட்டாா். தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும், சட்டரீதியாக அவற்றை எதிா்கொள்வேன் என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், பி.ஆா். சுந்தா் பெங்களூருவில் பதுங்கியிருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீஸாா் அங்கு சென்று பி.ஆா்.சுந்தரை வியாழக்கிழமை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா். இதேபோல அவா் மனைவி மங்கையா்க்கரசியையும் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments